Tuesday, August 25, 2026

காலப்பயணி! - 1

 

18 ஆம் நூற்றாண்டில், ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாளர், கடிகார முகப்பில் உள்ள முட்களை நகர்த்துவதன் மூலம் மட்டுமே காலத்தின் ஊடாகப் பயணிக்கக்கூடிய ஒரு காலக் கடிகாரத்தை உருவாக்கினார். இருப்பினும், மூடநம்பிக்கை கொண்ட கிராமவாசிகள், கண்டுபிடிப்பாளரின் படைப்புகள் பில்லிசூனிய வேலை என்று நம்பி, அந்தக் கடிகாரத்தை உள்ளூர் குளத்தில் வீசி எறிந்தனர். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இளைஞன் டேனி ஜோன்ஸ் தற்செயலாக அந்தக் கடிகாரத்தை வெளியே எடுத்து, அதன் சக்திகளைக் கண்டறிந்து, காலத்தின் ஊடாகத் தொடர்ச்சியான சாகசப் பயணங்களில் ஈடுபட்டான். 




டேனி ஜோன்ஸுக்கு எப்போதெல்லாம் விருப்பமோ, அப்போதெல்லாம் அவனால் கடந்த காலத்திற்குப் பயணிக்க முடிந்தது. அவன் செய்ய வேண்டியதெல்லாம், தனது அற்புதமான கடிகாரத்தின் முட்களை, தான் செல்ல விரும்பிய நூற்றாண்டுக்கும் ஆண்டிற்கும் திருப்புவது மட்டும்தான்... 


கதை எண் 1: வைகிங் படையெடுப்பு! 

காலங்களுக்குள் பயணிக்கும் அந்த இயந்திரத்தை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

இவன் அறிவியல் ஆராய்ச்சி செய்யறதா சொல்லிக்கிறான்! ஆனா இவன் ஒரு சாத்தான்னு நான் சொல்றேன்! 

இவனோட நரகப் பட்டறையை அடிச்சு நொறுக்குங்க!


அக்காலத்தில், அறிஞர்கள் விரும்பப்படாதவர்களாக இருந்தனர்...

வேண்டாம், இரக்கம் காட்டுங்கள்! அது என் காலக் கடிகாரம்!

 உன்னுடைய மற்ற தீய மந்திரங்களுடன் இதையும்  குளத்திற்குள் எறிந்து விட்டேன் சூனியக்காரனே!



இரண்டு நூற்றாண்டுகளாக, அந்த காலக் கடிகாரம் சேற்றுக் குளத்தில் மறைந்திருந்தது. பிறகு...

நல்லது, காந்தம் வேலை செய்கிறது! அது என்ன கொண்டு வருமோ...

...டேனி ஜோன்ஸ் தனது சொந்தக் கண்டுபிடிப்புடன் வந்தான்.



அப்படியாக, அந்த நேரக் கடிகாரம் டேனி ஜோன்ஸின் கைகளில் கிடைத்தது; அதன் விசித்திரமான இயக்கமுறையைச் செயல்படுத்தக் கற்றுக்கொண்ட அவன், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே பயணிக்கும் காலப்பயணியாக மாறினான்.



ஒரு நாள், டானி வெளிநாட்டிலிருந்து  வந்த தன் அங்கிளைச் சந்திக்க விமான நிலையத்துக்கு சென்றான்...

கடவுச்சீட்டைக் காட்டுங்கள்!

தெரிவிக்க வேண்டிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா?

அடடா, நாம் இங்கே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்குமே டானி! இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிப்பதற்கு முன்பே இவ்வளவு ஆர்ப்பாட்டமும் அலைச்சலும் இருக்கிறதே!


பழைய நாட்களில் கடவுச்சீட்டு இல்லாமலே எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிந்தது!

என்ன இது? சுங்கச் சோதனையின்போது இதை ரகசியமாகக் கடத்திச் செல்லப் பார்க்கிறாயா?

இல்லை, பொறுங்கள்...



ஒரு பழங்காலக் கடிகாரமா? இதற்கு நிறைய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்!

ஹே!அந்தக் கடிகார முட்களை சுழற்றாதீர்கள்! நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை...



டானி தடுக்கும் முன்பு அதிகாரியின் கைகள் கால இயந்திரத்தை இயக்கின; டானியும் அவனுடைய அங்கிளும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி மின்னல் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்...

ரொம்பத் தாமதம் அங்கிள்!


என்ன நடந்தது? நாம் எங்கே இருக்கிறோம்?

நாம் கடந்த காலத்திற்கு வந்துவிட்டோம், அங்கிள்!  இவற்றைப் பார்த்தால், மிகவும் பழைய காலம் போலத் தெரிகிறது! நாம் ஒரு கப்பலில் இருப்பது போல் உணர்கிறேன். 



நாம் ஒரு வைகிங் படகில் இருக்கிறோம்! இது போன்ற படகுகளின் பெரும் அணிவகுப்பே இங்கே உள்ளது!

போருக்குத் தயாராகுங்கள், நார்ஸ் வீரர்களே! நாம் கரையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்!



வீரர்களே, இன்று நமது போர்க்கோடரிகள் இரத்தத்தைச் சுவைக்கும்!

அங்கிள் சீக்கிரம் இந்த உரோம ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்! நாம் மாறுவேடம் போட வேண்டும்!


வலிமைமிக்க ஓடின், சாக்சன் கடற்கரையில் எங்களுக்கு வெற்றியையும் பெரும் கொள்ளையையும் அருளுவாயாக!

ஊப்ப்!  இந்த வைகிங்குகள் எங்கே செல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிகிறதா, அங்கிள்? இங்கிலாந்துக்கு!



இவர்கள் நிச்சயமாக கடவுச்சீட்டுகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை!

நார்ஸ் வீரர்களே, அந்த சாக்சன் கழிசடைகளை அடித்து விரட்டுங்கள்!



யாயாயாஆ! 

விடாதே! கொல்லு! 

நம்ம காலத்திற்கே திரும்பி போய்விடலாம் டானி!

மன்னிக்கனும் அங்கிள்! என் காலக்கடிகாரம் சுங்க அதிகாரியிடம் உள்ளது!  



ஆனால் திடீரென்று... 

இது கொள்ளையடிக்க வேண்டிய நேரம்!

ஓடின் மீது ஆணையாக, இது யார்?

ஐயய்யோ!



டானி, அவர்கள் சுங்க அதிகாரிகள்!

ஆமாம், அங்கிள்! காலக் கடிகாரம் நம்முடன்.  அவர்களையும்  வரவழைத்திருக்க வேண்டும்!

என்னைப் பின்தொடர்ந்து வா, மாகஸ்!  ஆனால் கவனமாக இரு!



நீங்கள்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்பட நடிகர்கள் குழுவாக இருக்க வேண்டும்.

தெரிவிக்க வேண்டிய பொருட்கள் ஏதேனும் உள்ளதா?

என்ன?


இது எப்படி இருக்கு சாக்சன்?

உலோகப் பொருட்களுக்கு வரி ஏதுமில்லை! நான் என் சாக்பீஸ் அடையாளத்தை மட்டும் இதன் மீது இடுகிறேன்! 


அந்நிய நாட்டிலிருந்து வரும் விசித்திரமான மனிதர்களைக் கையாள்வதில் அந்த அதிகாரிகளுக்கு நல்ல அனுபவம் இருந்தது...

ஓடினின் தாடி மீது ஆணையாக, எங்களை ஊருக்குள் போக விடு!

கடவுச்சீட்டு இல்லாமலா? நிச்சயமாக முடியாது! அப்புறம், என் மேஜை மீதிருக்கும் உன் அழுக்குக் கையை எடு; இல்லையென்றால் உன் கையிலேயே முத்திரை வைத்து விடுவேன்!



அந்த ரப்பர் முத்திரை அதன் ஒரே அடையாளத்தை விட்டுச் சென்றது...

இ-இவர்கள் மந்திரவாதிகள்! என் கையில் ஒரு மாய முத்திரை பதிக்கப்பட்டுள்ளது!

என் கோடரியிலும் ஒன்று இருக்கிறது!



நார்ஸ் வீரர்களே, தப்பி ஓடுங்கள்! சாக்சன்களிடம் அவர்களைப் பாதுகாக்க மந்திரவாதிகள் இருக்கிறார்கள்!

இவர்கள் மந்திரவாதிகள்தான்! ஒரு சாக்பீஸையும், ரப்பர் முத்திரையையும் வைத்துக் கொண்டு வைகிங் கூட்டத்தை விரட்டி அடிப்பது எவ்வளவு பெரிய விஷயம்!


சாக்சன்கள் தங்களைக் காப்பாற்ற வந்தவர்களை ஆரவாரம் செய்து வரவேற்றனர்...

அந்நியர்களே, வாழ்க! நீங்கள் எங்கள் கிராமத்தை கொள்ளையடித்து, தீவைக்கப்படுவதில் இருந்து காப்பாற்றிவிட்டீர்கள்!

அந்நியர்களா? சேச்சே! நாங்களும் ஆங்கிலேயர்கள்தானே!

அங்கிள் இதோ என் காலக் கடிகாரம்! நாம் இனியும் இங்கே தாமதிக்க வேண்டாம்! 



டானி காலக் கடிகாரத்தின் முட்களை நிகழ்காலத்திற்கு அமைத்தான்...

ஊஊஊப்!



அப்பாடா, இனி நான் ஒருபோதும் கடவுச்சீட்டுகளைப் பற்றிக் குறை சொல்லவே மாட்டேன், டானி!

ஆனால், அவைதான் தொல்லை தருபவர்களை நாட்டுக்குள் விடாமல் தடுக்கின்றன, இல்லையாஅங்கிள்?

நீங்கள் இருவரும் அணிந்திருக்கும் இந்த மாறுவேட பொருட்களுக்கு முழு வரி கட்ட வேண்டும்!

      tne end! 

ஓடின்:

நார்ஸ் தொன்மவியலின் மிக முக்கியமான, முதன்மைத் தெய்வம் ஓடின். வைகிங் பண்பாட்டில் இவரைத் தெய்வங்களின் தலைவனாகவும் ஞானம், போர், வெற்றி மற்றும் மரணத்தின் அதிபதியாகவும் வழிபட்டனர். 

வைகிங் வீரர்கள் போருக்குச் செல்லும்முன் "ஓடின் மீது ஆணையிடுகிறேன்!" என்றோ "ஓடினுக்கு என் வெற்றி சமர்ப்பணம்!" என்றோ முழக்கமிட்டுப் போரிடுவர். எதிரிகளை அச்சறுத்த ஓடினின் பெயரைச் சபதமாகவும் ஆணையாகவும் பயன்படுத்துவது அவர்களின் வழக்கம்.

ஆங்கிலத்தில் புதன்கிழமையைக் குறிக்கும் Wednesdayஎன்ற சொல், ஓடினின் பழைய ஆங்கிலப் பெயரான 'Woden's Day' என்பதிலிருந்தே உருவானது.

சுருக்கமாக, நார்ஸ் புராணங்களில் ஓடின் என்பவர் தியாகம், தந்திரம், ஞானம் மற்றும் வீரம் நிறைந்த ஒரு கம்பீரமான வழிபாட்டு உருவமாவார்.

*நார்ஸ்:

நார்ஸ் வீரர்கள் என்பது இடைக்காலத்தில் சுமார் 8 முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை ஸ்காண்டிநேவியப் பகுதிகளில் வாழ்ந்த வட ஐரோப்பிய மக்களைக் குறிக்கும் பொதுவான பெயர்.

இவர்களையே வைகிங்குகள் என்றும் அழைக்கிறார்கள்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்:

 நோர்ஸ்மேன் வடக்கு நிலத்தைச் சேர்ந்த மனிதர்கள் (North-men).

 தற்போதைய டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஸ்காண்டிநேவியப் பகுதியில் வாழ்ந்த மக்களின் இனம், மொழி, பண்பாடு சார்ந்த பொதுப் பெயர். இவர்கள் விவசாயிகள், மீன்பிடிப்பவர்கள், கைவினைஞர்களாக வாழ்ந்தனர்.

 வைகிங் என்பது ஒரு இனத்தின் பெயர் அல்ல; அது அவர்கள் செய்த தொழில்/செயலைக் குறிக்கும் சொல்.

 நோர்ஸ் மக்களில் சிலர் கடல்வழியாகப் பயணம் செய்து பிற நாடுகளின் மீது தாக்குதல் நடத்தினர், கொள்ளையடித்தனர், வர்த்தகம் செய்தனர், புதிய நிலங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு கடற்பயணம் மேற்கொண்டு சாகசங்களில் ஈடுபட்ட நோர்ஸ் மக்களையே வைகிங்குகள் என்று அழைத்தனர்.

சுருக்கமாக: எல்லா நோர்ஸ்மேன்களும் வைகிங்குகள் அல்ல. ஏனெனில் பலர் அமைதியான முறையில் விவசாயம் மட்டுமே செய்தனர்.

  ஆனால், எல்லா வைகிங்குகளும் நோர்ஸ்மேன்கள் தான். அவர்கள் அனைவரும் அந்த வட நிலப்பகுதியிலிருந்து வந்தவர்கள்.


*சாக்சன்: 

சாக்சன் பண்டைய இங்கிலாந்தில் வாழ்ந்த மக்கள். வைகிங்குகளின் எதிரிகள். 

ஆரம்பகால மத்திய நடுத்தரக் காலத்தில் வடக்கு ஐரோப்பியப் பகுதிகளில் வாழ்ந்த ஒரு சக்திவாய்ந்த ஜெர்மானியப் பழங்குடி இன மக்கள்.

 இவர்கள் தற்போதைய வடமேற்கு ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து எல்லைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.

 இவர்கள் போரில் பயன்படுத்திய சீக்ஸ் என்ற ஒருபக்கம் கூர்மையான குறுகிய கத்தி ஆயுதத்தில் இருந்தே 'சாஃக்சன்' என்ற பெயர் உருவானது.

கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது, சாஃக்சன்கள் தங்கள் அண்டை இனங்களான ஆங்கிள்கள் மற்றும் ஜூட்டுகள் ஆகியோருடன் இணைந்து கடல் கடந்து பிரிட்டன் (இன்றைய இங்கிலாந்து) தீவுக்குள் படையெடுத்துக் குடியேறினர்.

 பிரிட்டனில் குடியேறிய ஆங்கிள் மற்றும் சாஃக்சன் இன மக்கள் ஒன்றாக இணைந்து 'ஆங்கிலோ-சாஃக்சன்கள்' என்று அழைக்கப்பட்டனர்.

 இவர்கள் நிறுவிய பல சிறிய ராஜ்ஜியங்களே பின்னாளில் ஒருங்கிணைந்து இங்கிலாந்து என்ற நாடாக மாறியது.

இவர்கள் பேசிய பழங்கால ஜெர்மானிய மொழியே 'பழைய ஆங்கிலம்' எனப்பட்டு, தற்போதைய நவீன ஆங்கில மொழிக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

பிரிட்டனில் குடியேறிய சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவர்கள் முழுமையாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர்.

இன்றைய இங்கிலாந்தின் பண்பாடு, ஆட்சி முறை மற்றும் ஆங்கில மொழியின் வேர்கள் இந்த சாக்சன் மக்களிடம் இ ருந்தே தொடங்குகின்றன.

 

******-*************-***********-

No comments:

Post a Comment