Wednesday, August 26, 2026

NEWS TEAM - 1

 

 இதுவரை அமைக்கப்பட்ட செய்தி சேகரிப்புக் குழுக்களிலேயே இவர்கள்தான் மிகவும் முரட்டுத்தனமானவர்கள். 



8566448 NJC TV நியூயார்க் 7519831 நியூஸ் டீம் ஆப்பிரிக்கா

ஜெர்ரி மேடாக்ஸ் அவர்களின் கவனத்திற்கு.

மத்திய ஆப்பிரிக்க நாடான போன்வானாவிற்குச்  செல்லவும்; அங்கு ஒரு கொடூரமான ராணுவ ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். மேற்கத்திய நாடுகளின் நல்ல நண்பராகத் திகழும் கிளர்ச்சியாளர் தலைவரைச் சந்தித்து நேர்காணல் ஒன்றை மேற்கொள்ளவும்.

வாழ்த்துகள்

ஜான் வெய்ன்ஸ்டீன்

NJC TV  நியூயார்க்



அங்கே பாருங்க! நமக்குக் கிடைச்ச தகவல் உண்மைதான்! துப்பாக்கிச் சுடும் குழு ஒன்னு கிளர்ச்சித் தலைவரைச் சுட்டுக் கொல்லப் போகுது!

இன்னும் ஏன் தாமதிக்கனும்? வாங்க, நாமளும் அந்த கச்சேரில சேர்ந்துக்கலாம்!
 

ஹே! பசங்களா... எல்லாத்தையும் அப்படியே நிறுத்துங்க!

என்ன? என்ன இது?



ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த கர்ட் கோப்பல் இந்தத் துறையிலேயே மிகச் சிறந்த கேமராமேன்.

 சீக்கிரம் இறங்குங்க... நியூஸ் டீமின் அதிரடி ஆட்டத்தைக் கொஞ்சம் காட்டுவோம்!


டெக்ஸ் டொனோவன் எல்லாராலும் ராட்ஸ் என்று அழைக்கப்படுபவன். இந்தக் குழுவின் ஓட்டுநர்! மிகச் சிறந்த வாகன ஓட்டி...


...ஆனால் கொஞ்சம் பயந்த சுபாவம்!  

இது சுத்தப் பைத்தியக்காரத்தனம்! கடைசியில் நம்மளையும் மரண தண்டனை கொடுத்து சுட்டுக் கொன்று விடுவார்கள்!

வாயை மூடு ராட்ஸ்! வண்டியை நேராக அந்த அதிகாரியின் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்து!


சற்றும் பதறாத குணம் கொண்ட ஜெர்ரி மேடாக்ஸ் அந்தக் குழுவின் தலைவர்.

நாங்கள் தொலைக்காட்சி  செய்திப்பிரிவில் இருந்து வருகிறோம். இன்றைய நிகழ்ச்சியின் கதாநாயகன் நீங்கள்தான்! 


ஆ... ஆனா! நான் அந்த புரட்சிக்காரனுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமே!

அதற்கெல்லாம் நிறைய நேரம் இருக்கிறது. ஒலிப்பதிவுக் கருவிகளைச் சீக்கிரம் இங்கே கொண்டு வா கேத்தி!


கேத்தி பில்ட்மோர் தான் ஒலிப்பதிவாளர்.

எல்லாக் கருவிகளும் தயாராக உள்ளன!

ஹே! பொண்ணுல்லாம் இங்க வரக்கூடாது!


விலகிப்போடா முட்டாளே! நான் வேலை செய்யும்போது எவனும் குறுக்கே நிற்கக் கூடாது! 



இந்த வாளை உயர்த்தி சுடுவதற்கு உத்தரவு கொடுக்க வேண்டும் சரிதானே?

ஆமாம், கரெக்ட்டா சொன்னே! 


இதை ஒரு சிறந்த நினைவுப் பரிசாக எடுத்துக் கொள்கிறேன்! 

ஆஆஆ! 



ஜெர்ரி தாக்குதலை துவங்கி விட்டான்.  நான் தைரியமாகச் செயல்பட வேண்டிய நேரம் இது. 


ராட்ஸ் ஜீப்பின் ஆக்ஸிலேட்டரை பலமாக மிதித்தான்...

ஏய்ய்ய்!

ஈஈக்க்! 


உன் ஆளுங்க இப்போ யாரையும் சுட்டுக்கொல்ல விரும்பலைன்னு நினைக்கிறேன்.

ஐயோ!


 இப்போ நாம கிளம்பலாம் வா கேத்தி! 

அனைத்தையும் கர்ட் ஒளிப்பதிவு செய்திருப்பான்னு  நம்புகிறேன்!



அனைவரும் ஏறுங்கள். புரட்சி நண்பரே! உங்கள் மரண தண்டனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது! 


 ஒளிப்பதிவு எப்படி வந்திருக்கு?

ஒரு அதிரடி  சினிமா மாதிரி! ஒரு மரணதண்டனையை படம்பிடிப்பதை விட இது எவ்வளவோ மேல்!


குனிந்து பதுங்குங்கள், அவர்கள் நம்மை நோக்கிச் சுடத் தொடங்கிவிட்டார்கள்!

​அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டார்களா? நம்மைப் பின்தொடர்ந்து வராமல் தடுப்பது நல்லது. அந்தச் சிவப்புப் பெட்டியைத் திற! 


சிவப்புப் பெட்டி அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன் உள்ளடக்கங்களை ராட்ஸ் டோனோவன் தயார் செய்திருந்தான்.

இதுதான் நமக்குத் தேவை!


நீ இதை படமாக்கிக்கொண்டிருக்கிறாய் என்று நம்புகிறேன், கர்ட்!

அட்டகாசமாக பதிவாகிக்கொண்டிருக்கிறது!




ஆறு மைல்களுக்குப் பிறகு...

 நண்பர்களே! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை...

அது சுலபம், சார்! எங்களுக்கு மட்டும் ஒரு பிரத்யேக நேர்காணல் கொடுங்கள்!



 டிவியில் ஒளிபரப்பான செய்திக்குழுவினரின் நேர்காணலுக்குக் கிடைத்த விமர்சனம் இதுதான்!

இந்த நிகழ்ச்சி ரொம்ப போரடிக்குது, சுவாரஸ்யமே இல்லை! 

வெறும் வழவழ பேச்சு, யுத்த காட்சிகளையும் கொஞ்சம் காட்டலாம்! 

அவர்களுக்கு மட்டும்  அந்த நேர்காணலுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட சாகஸங்கள் பற்றி தெரிந்திருந்தால்?


              The end! 

No comments:

Post a Comment