பூமிக்கு மேலே 550 மைல் உயரத்தில், கண்ணுக்குத் தெரியாத பனி போன்ற ஒரு விசித்திரத் தடுப்புச்சுவர் மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது.
விண்வெளியில் இருந்து வரும் அனைத்து ரேடியோ, ரேடார் அலைகளையும், சூரியனின் கதகதப்பான வெப்பத்தையும் கூட அது பூமிக்கு வராமல் தடுத்து மறைத்துக் கொண்டிருந்தது!
ஜெட் வீரர் லோகன் பயணிக்கும் 'R.A.F.' விண்வெளி ரோந்துக் கலன், அந்த தடுப்புச்சுவரைப் பற்றி ஆராய்வதற்காக அதன் விளிம்பிற்குள் மெல்ல நுழைந்தது. ஆனால், அந்தத் தடுப்பை உருவாக்கியிருந்த விசித்திரமான பொருளுக்குள்ளேயே அது நகர முடியாதவாறு மாட்டிக்கொண்டது!
பூமியில், 'R.A.F.' விண்கலத்திலிருந்து வரும் அவசரச் செய்திக்காக அனைவரும் பதற்றத்துடன் காத்துக்கொண்டிருந்தனர்.
மேற்கொண்டு எந்த அறிக்கையும் வரவில்லை சார்! அனைத்து அலைவரிசைகளும் முடங்கி விட்டன!
தொடர்ந்து முயற்சி பண்ணுங்க! ஃப்ர்ர்... இன்னைக்கு ரொம்பக் குளிருதே! வெப்பமூட்டும் அமைப்பை அதிகப்படுத்தச் சொல்லுங்க!
அது ஏற்கனவே முழு வேகத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு சார்! நாடு முழுக்கவே வெப்பநிலை வேகமாகக் குறைஞ்சுகிட்டு வருது. ஆங்கிலக் கால்வாயிலேயே பனி படர்ந்திருப்பதாகக் கூட வதந்திகள் வருகின்றன!
மத்திய ஐரோப்பாவில் வழக்கத்தை விட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பனிப்பொழிவு தொடங்கியிருந்தது.
ரஷ்யாவின் 'U.S.S.R' அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், 500 மைல்களுக்கு மேலுள்ள சுற்றுப்பாதைக்குள் நுழைவதற்காக வரிசையாகப் பல ஆய்வு ராக்கெட்டுகளை அவசர அவசரமாக ஏவியது.
அந்த ஏவுகணைகள் இருள் சூழ்ந்த ரஷ்ய வான்வெளியைப் பிளந்துகொண்டு மேலே மேலே சீறிப் பாய்ந்தன! அவற்றின் கருவிகள் அனைத்தும் இயல்பாக இருப்பதாக சிக்னல்களை ஒலித்துக்கொண்டே இருந்தன. 550 மைல் உயரத்தை எட்டும் வரை...
...அடுத்த கணம் அந்த சமிக்ஞைகள் அனைத்தும் திடீரென அப்படியே நின்று போயின!
அதே நேரத்தில், இங்கிலாந்து கடுங்குளிரை அமைதியுடன் சகித்துக் கொண்டிருந்தது.
அந்த ஆய்வுக்காக நாம் மேலே அனுப்பி வைத்த R.A.F. விண்கலத்தோட தொடர்பை மீட்கத் தொடர்ந்து முயற்சி செய்யுங்க!
ஆனால், அந்த R.A.F. விண்கலம் பெரிய பிரச்சனையில் இருந்தது. அந்த விசித்திரமான பனிபோன்ற பொருளின் மேல் பகுதியில் அது பலமாக மாட்டிக் கொண்டிருந்தது!
கட்டுப்பாட்டு அறைக்குள்...
இங்கிருந்து விடுபட்டு வெளியேறத் தயாராகுங்கள்! அனைத்து இயந்திரங்களையும். முழு வேகத்துடன் இயக்குங்கள்!
தங்களைத் தூக்கித் தரையில் அடித்து நொறுக்கக்கூடிய அந்தத் திடீர் வேக அதிகரிப்பைத் தாங்குவதற்காக, விண்கலத்தின் வீரர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்த விண்கலம் மிகவும் மந்தமாகச் சுழன்று, அதிர்ந்து நடுங்கியது.
பின்னர், மெல்ல மெல்ல, பெரும் சிரமத்துடன் தன்னை விடுவித்துக்கொண்டு மேலே எழும்பியது.
இறுதியாக, அந்த ராட்சத விண்கலம் தடங்கலின்றி மேலே ஏறியது; விண்கலத்தைப் பற்றிக் கொண்டிருந்த தடுப்பின் எஞ்சிய பகுதிகள், ஓடும் நீரைப் போல நழுவி விலகின...
அதைப் பாரு, குண்டுப் பையா! அந்தப் பொருள் அதி வேகத்துல உருகி ஓடுது !
அந்தப் பொருளின் கடைசிச் சில துளிகளும் விண்வெளியில் கரைந்து மறைந்தன... ஜெட் வீரர் ஜிம் லோகன், தன் கம்பீரமான விண்கலனின் தூய்மையான வெளிப்புறத்தைப் பார்த்து பெருமூச்சுடன் நன்றி கூறிய அந்த நொடியில், எச்சரிக்கை மணி கடுமையாக அடித்தது!
அடையாளம் தெரியாத பொருள்கள் நெருங்கி வருகின்றன! அனைத்து விமானிகளும் ஆயத்தமாகுங்கள்!
எதிரிகள்! ஒரு கை பார்த்துடுறோம்! அதுக்குன்னு இந்தக் கருவில என் காதுக்குள்ளயே கத்தணும்னு அவசியம் இல்லையே!
விமானிகள் தங்கள் தாக்குதல் கலங்களை நோக்கி வேகவேகமாக ஓடத் தொடங்கவே, அந்தப் பிரம்மாண்ட விண்கலனின் கீழ் தளத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
யாஹூ! இதோ சண்டை வீரன் லோகன் வர்றான்!
அனைவருக்கும் முன்னால் ஓடிக்கொண்டிருந்த லோகன் திடீரென நின்றார்!
நான் எதுக்காக இப்போ ஓடிக்கிட்டு இருக்கேன்? என்னோட விண்கலம்தான் விண்வெளி முழுக்க அணு அணுவா நொறுங்கிச் சிதறிடுச்சே!
ஏய், லோகன்... அது என்னோட விண்கலம்!
எனக்கு வாழ்த்துச் சொல்லு தோழா! உன் விரல்களைப் பார்த்து பத்திரமா வெச்சுக்கோ! நான் கதவை மூடப் போறேன்!
அனைத்துத் தாக்குதல் கலன்களும் வான்வெளி தாக்குதலுக்குத் தயாராகுங்கள்!
லோகன், வின்கல அறையின் கண்ணாடிக் கூரையை உலோக ஓசையுடன் சட்டென மூடிப் பூட்டினார். தன் கலனைப் பறிகொடுத்த அந்த விமானியால், விண்வெளி தாக்குதலுக்கு பாயப் போகும் அந்த இயந்திர அமைப்பிலிருந்து விலகுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் போனது!
ஒன்று தயார்!
இரண்டு தயார்!
மூன்று தயார்!
எதிரி பத்து மணித் திசையில் வருகிறான்! குறுக்கிட்டுத் தாக்குங்கள்!
யாகூஊஊ! இதோ சண்டையில் இணையற்ற வீரன் லோகன் வர்றான்! கவனமா இருங்கடா விண்வெளிப் பூச்சிகளா!
தொடரும்...

















No comments:
Post a Comment