Tuesday, August 25, 2026

ப்ரூஸ் கெண்ட் - 2

 

ஒரு திருடனை தேடி...


துப்பறிவாளர் புரூஸ் கென்டும் அவரது உதவியாளர் ஜிம்மும் பாதுகாப்புப் பெட்டகங்களின் பூட்டுகளை உடைத்து  திருடும் ஸ்லிக் ஃபென்டன் என்பவனை தேடிக்கொண்டிருந்தனர்.

இதுவரை சுமார் ஐம்பது வீடுகளில் விசாரித்துவிட்டோம் சீஃப்! ஆனால் அவனை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை.

இந்தப் பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர்தான் அவனை மறைத்து வைத்திருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அதோ தெரியும் பங்களாவுக்குச் சென்று விசாரிப்போம்.



பங்களாவின் உரிமையாளரான திரு. ஹாலோவே கதவைத் திறந்தார்.

உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்; நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் இந்த நபரை பார்த்திருக்கிறீர்களா? 

இல்லை!  இவனை நான் பார்த்ததே இல்லை!



ம்ம்! நீங்கள் இங்கே தனியாக இருக்கிறீர்களா?

ஆம், நான் தனியாகத்தான் இருக்கிறேன்!



அந்த பங்களாவில் இருந்த ஏதோ ஒன்று ப்ரூஸிற்குள் ஆழ்ந்த சந்தேகத்தை எழுப்பியது!

அந்தத் துப்பு என்னவென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?


இங்கும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை சீஃப்! 

அப்படியில்லை! நான் மீண்டும் இங்கே வரப் போகிறேன். மாறுவேடத்தில்! 


சில நிமிடங்களுக்குப் பிறகு...

என்னது, நீங்களே 'ஸ்லிக் ஃபென்டன்' போல வேஷம் போட்டுக்கொள்கிறீர்களே! என்ன திட்டம், சீஃப்?

சீக்கிரமே தெரிஞ்சுடும்! இப்போ என்கூட வா! 


பின்னர், பங்களாவின் பின்புறத்தில்...

ஜிம், நீ இங்கேயே விரைவாகச் செயல்படத் தயாராக இரு!

 ப்ரூஸ் பங்களாவின் பின் கதவை தட்டினார். 



ஹாலோவே கதவைத் திறந்ததும், அதிர்ச்சியோடு கத்தினார்.

ஸ்லிக்! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? சமையலறை அலமாரிக்குள் ஒளிந்துகொள்ளுமாறு நான் உன்னிடம் சொல்லியிருந்தேனே!




கணப்பொழுதில் புரூஸ் தன் முக ஒப்பனையைத் துடைத்து அகற்றினார்.

நான் ஸ்லிக் ஃபென்டன் இல்லை! ஒரு துப்பறிவாளன்! ஹாலோவே, நீ ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறாய் என்ற எனது சந்தேகத்தை, நான் ஆடிய இந்த நாடகத்தை நம்பியதன் மூலம் நீயே உறுதிப்படுத்திவிட்டாய்!



கோபத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹாலோவேயை ஜிம் காவல் காத்துக்கொண்டிருக்க, ஸ்லிக் ஃபென்டன் தப்பிச் செல்ல முயன்றபோது,  புரூஸ் பாய்ந்து அவனை வீழ்த்தினார். 



பின்னர்...

அருமையான வேலை, சீஃப்!  ஆனால் ஹாலோவே மீது உங்களுக்கு எப்படி சந்தேகம் வந்தது?

அவன், தான் தனியாக இருப்பதாகச் சொன்னான்! ஆனால் மேஜையிலிருந்த சாம்பல் தட்டில் புதிதாகப் பற்றவைக்கப்பட்ட இரண்டு சிகரெட்டுகள் இருந்தன!


The end! 



No comments:

Post a Comment