நேற்று இரவு உன் வீட்டுப்பாடத்தைச் செய்தாயா வாட்சன்?
பாடம் எல்லா ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஆனாலும் எல்லாத்தையும் எப்படியோ முடிச்சுட்டேன்!
ஹாஹாஹா! அந்த அழுமூஞ்சி வாட்சன் எழுதுனதை காப்பியடிக்க, ஒரு அமைதியான இடத்துக்குப் போகனும்!
ஐயோ! ரவுடி பார்லோ என் வீட்டுப்பாடத்தை திருடிக்கிட்டுப் போறான்!
பதறாதே வாட்சன், நான் அவனை கண்டு பிடிக்கிறேன்!
எனது பிரத்யேக காப்புரிமை பெற்ற 'பார்லோ டிடெக்டர்' நம்மை அவனிடம் அழைத்துச் செல்லும்!
பார்லோ டிடெக்டர்
அருமை! நமக்குத் தேவையானது இதுதான்!
இந்தக் குமிழை இப்படித் திருப்புனா, இந்தச் சுட்டி அவன் இருக்கும் இடத்தைக் காட்டும்!
க்ளிக்!
சரி! என் பின்னால வா போவோம்!
ஆனா பார்லோ இந்தப் பக்கமா ஓடுனான்!
தர்க்கம் பண்ணாத, இந்த மிஷின் தப்பே பண்ணாது!
அந்த எருமை பார்லோவும், உன் தோள்பையும் நிச்சயமாக குளியலறையில்தான் இருக்கின்றன.
இது பார்லோ இல்லை! அவனுடைய அப்பா!
அடக் கடவுளே! என் திறமையான இயந்திரம் தவறான பார்லோவைக் கண்டுபிடித்துள்ளது!
என் குளியலறைக்குள் உளவு பார்க்க உனக்கு என்ன தைரியம்?
ஊப்ப்!
தொம்ம்!
அர்க்க்!
மறுநாள்...
மன்னிக்கனும் சார்... என் வீட்டுப்பாடத்தை நான் தொலைத்துவிட்டேன்!
ம்ஹ்ம்! சரி, நாளை காலைக்குள் அதை எப்படியாவது கண்டுபிடித்துவிடு!
உன் வீட்டுப்பாடம் எங்கே பார்லோ?











No comments:
Post a Comment